அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

Author: Selvan
19 March 2025, 7:20 pm

விசில் போடு – CSK-வின் அடையாளம்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்,தொடர்ந்து பல ஹிட் பாடல்களை வழங்கி வருகிறார்.சமீபத்தில் இவர் அஜித் நடிப்பில் வெளியான விடா முயற்சி படத்திற்கு இசையமைத்திருந்தார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திற்கும்,விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இதையும் படியுங்க: அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!

இவ்வளவு பிஸியாக இருக்கிற அனிருத்,ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தீம் மியூசிக் உருவாக்க அணி நிர்வாகம் அனிருத்தை அணுகியுள்ளது.ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து,காரணத்தையும் விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கனவே “விசில் போடு” என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.இந்த பாடலை உருவாக்கியது ஒரு சுயாதீன இசைக்கலைஞர்,அது உலகம் முழுவதும் CSK ரசிகர்களின் தீம் ஆக மாறிவிட்டது.அந்த மியூசிக்கிற்கும்,ரசிகர்களின் ஈடுபாட்டிற்கும் மாற்றாக வேறு ஒரு பாடலை வழங்க முடியாது என்பதால் நான் தீம் மியூசிக் போடவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் CSK என்றாலே எனக்கு முதல் நினைவில் வரும் விஷயம் ‘விசில் போடு’. அந்த பாடல் கேட்டாலே எனக்கே புல்லரிக்கும்.ரஜினி சாருக்கு ‘அண்ணாமலை’ தீம் மியூசிக் எப்படி இருக்கிறதோ,அப்படியே CSK-விற்கும் ‘விசில் போடு’ இருக்க வேண்டும்.அது ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது.அதற்கு மாற்றாக வேறு தீம் மியூசிக் உருவாக்க முடியாது என்று கூறியிருப்பதாக பேசப்படுகிறது.

  • Ranya Rao gold smuggling case துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!
  • Leave a Reply