ஈரோடு ஹைவேயில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை.. 3 பேர் சுட்டுப்பிடிப்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

Author: Hariharasudhan
19 March 2025, 7:57 pm

ஈரோடு நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

ஈரோடு: சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா (35). இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும், ஜான் மீது கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர், பெரியபாளையத்தில் வசித்து வந்தார். இதுதவிர, நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு ஒன்றுக்காக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக ஜான் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சரண்யாவும் வந்துள்ளார்.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு இருவரும் காரில் திருப்பூர் சென்றுள்ளனர். ஈரோடு, நசியனூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் கார் மீது மோதி நின்றுள்ளது. பின்னர், காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர்.

Erode Highway

அப்போது, இதனைத் தடுக்க முயன்ற ஜான் மனைவி சரண்யாவுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இதனையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

இந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, பவானி அருகே மர்ம கும்பல் தப்பி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அங்கு டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையிலான போலீசார், மர்ம கும்பலை கால்களில் சுட்டுப் பிடித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகிய மூவரையும் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Ranya Rao gold smuggling case துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!
  • Leave a Reply