அவமானம்.!தங்கச்சி புருஷன் செய்த மோசடி…தலைகுனிந்த விஷால்.!

Author: Selvan
21 March 2025, 6:06 pm

உம்மிடி கிரிட்டிஸுக்கு எதிராக சிபிஐ வழக்கு

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சில ஆண்டுகளாக பெரிய ஹிட் கொடுக்காமல் திணறி வந்த நிலையில்,சமீபத்தில் வெளியான மதகதராஜா திரைப்படம் அமோக வரவேற்பை கொடுத்தது.

இதையும் படியுங்க: நான் சின்னத்திரை நயன்தாராவா…ஐயோ வேண்டாம்..பிரபல நடிகை புலம்பல்.!

இவருடைய குடும்பம் பெரிய பிசினஸ் பின்புலம் கொண்டுள்ளதால்,இவருடைய தங்கையான ஐஸ்வர்யாக்கு 2019-ஆம் ஆண்டு பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த ஜோடியின் திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.2022-ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது,நடிகர் விஷால் தங்கையின் கணவர் உம்மிடி கிரிட்டிஸ் மீது,சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.அதாவது போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.சுமார் 2.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாகக் கூறி,அதிகாரிகள் அவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வு விஷால் குடும்பம் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • OTT company bought the jackpot by capturing Jana Naygan for several crores ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!
  • Leave a Reply