தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு : அமித்ஷா பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2025, 6:56 pm

இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து சரமாரியாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது, ஊழலை மறைக்க மொழி பிரச்சனை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது.

நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் வலிமை பெற்று வருகிறது. இந்தி மொழி அனைத்து மொழிகளுக்கு நண்பன்தான், மொழி பெயரால் விஷத்தை பரப்புகிறார்கள் அவர்கள்.

இந்திய மொழிகளை விட சிலருக்கு அந்நிய மொழிகள் மீதே ஆர்வம். மொழியின் பெயரால் அரசியல் ய்கின்றனர். பிராந்திய மொழி பேசும் நாங்கள் எதற்கு நம் நாட்டின் மொழியை எதிர்ப்போம்?

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது,தமிழில் உயர்கல்வி அளிக்கும் என பேசிய அமித்ஷா,தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என பேசினார்.

  • தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!
  • Leave a Reply