நான் வீழ்வேனா..வீல் சேரில் சென்றாவது விளையாடுவேன்..மனம் திறந்த எம்.எஸ்.தோனி.!

Author: Selvan
23 March 2025, 4:51 pm

தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.ஆனால் 43 வயதான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஐபில் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதையும் படியுங்க: வா முடிஞ்சா மோதி பாரு..CSK-வை வாழ்த்திய கமலின் ‘தக் லைஃப்’ படக்குழு.!

2023 வரை கேப்டனாக இருந்த தோனி கடந்த ஆண்டு முதல் விக்கெட் கீப்பர் மற்றும் முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் செயல்படுகிறார்.

கடந்த 2024 ஐபிஎல் சீசனே தோனியின் கடைசி சீசன் என பலரும் கருதினார்கள்.ஆனால்,ரசிகர்களின் அன்பும்,ஆதரவும் காரணமாக இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி அறிவித்தார்.

இதையடுத்து,சென்னை அணியின் நிர்வாகம்,2025 ஐபில் சீசனுக்கு முன்னதாக,அவரை 4 கோடி ரூபாய்க்கு அன் கேப்டு வீரராக தக்க வைத்தது.

2025 ஐபில் சீசனின் முதல் லீக் போட்டியில், ன்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.

இந்நிலையில் Jio Hotstar ஏற்பாடு செய்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டார்.அங்கு தன் ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த அவர் “நான் சிஎஸ்கே அணிக்காக எவ்வளவு ஆண்டுகள் விளையாட விரும்புகிறேனோ,அவ்வளவு தூரம் விளையாடுவேன்,அது என்னுடைய அணி,நான் வீல் சேரில் இருந்தாலும் கூட என்னை அழைத்து சென்று விளையாட வைப்பார்கள்” என்று சிரித்தபடி கூறினார்.

தோனியின் இந்த நகைச்சுவையான பதில் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!
  • Leave a Reply