ரவுடி சரித்திரப் பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர்.. திமுகவில் படித்துவிட்டு.. அண்ணாமலை கடும் தாக்கு!

Author: Hariharasudhan
24 March 2025, 8:56 am

திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை என்றும், ரவுடி சரித்திரப் பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர் பாபு என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருச்சி: திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி, 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர். இது அரசியல் புரட்சியே. மே மாத இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனால், இதை மறைத்து திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர்.

தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது, விகிதாச்சார அடிப்படையில்தான் நடக்கும் என பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட, தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகம் மட்டும் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

Annamalai Vs Sekar Babu

மொத்தக் கடன் தொகை ரூ.9 லட்சம் கோடி ஆகும். இந்தியாவில் வேறு யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறு காணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படி தருவார்கள்? தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது.

இதையும் படிங்க: தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம். திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம்.

காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். சிறைக்குச் சென்றவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையைப் பற்றி பேசிக் கொண்டிருகின்றனர்.

சென்னையில் ரவுடி சரித்திரப் பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!
  • Leave a Reply