மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 11:48 am
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியிருந்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்ட போது ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் விலகினார். காரணம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தை இயக்கும் பொறுப்பை சுந்தர் சியிடம் ஒப்படைத்தார்.
இதுவரை சுந்தர் சி நயன்தாராவை இயக்கியதில்லை. இதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், படத்தின் பூஜை விழா பேசுபொருளாக மாறியது. காரணம், விழாவில் பங்கேற்ற நடிகை மீனாவுக்கு நயன்தாரா மரியாதை கொடுக்காமல் போனது.
இதனால் இவர்களை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. மீனா போட்ட இன்ஸ்டா ஸ்டேட்டஸ், நயன்தாராவை பற்றித்தான் என பரவலாக பேசப்பட்டது. மீனாவை அவமதித்ததால் நயன்தாராவை வைத்து இயக்கமாட்டேன் என சுந்தர் சி, தனது மனைவி குஷ்புவிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்க: ரஜினிக்கு டூப் போட்டு நடித்த மனோஜ் : எந்த படத்துக்கு தெரியுமா?
இப்படி மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
சுந்தர் சி எப்படிப்பட்டவர் என எல்லோருக்கும் தெரியும். திறமையான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. தேவையில்லாமல் படம் குறித்து வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது எல்லாம் திருஷ்டி எடுத்த மாதிரி ஆகிவிட்டது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நிச்சயம் அடுத்த பிளாக் பஸ்டர் தான் என பதிவிட்டுள்ளார்.
எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குஷ்பு இப்படி பதிவு செய்துள்ளாரா அல்லது, பெரிய பட்ஜெட் என்பதால் படத்துக்கு தேவையில்லாத விமர்சனம் வந்ததுவிடக்கூடாது என்பதற்காக பதிவிட்டாரா என நெட்டிசன்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.