கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 1:02 pm
கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில் 29 வயது இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். கணவருக்கு துபாயில் வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார்.
இதையும் படியுங்க: டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!
இந்த நிலையல் இளம் பெண் வீட்டில் தனியே இருந்த போழது, கம்மாபிரலம் கோ மாவிடந்தல் கிராமத்தில் வசித்த சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதை வீடியோவாக பதிவு செய்து, பெண்ணிடம் காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த வீடியோவை தனது நண்பன் வினோத்துக்கும் காண்பித்துள்ளார்.
சபல புத்தி கொண்ட வினோத்தும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் சிவக்குமார் மற்றும் வினோத் இருவரும் இணைந்து அந்த பெண்ணிடம், ரூ.50 ஆயிரம் பணம், 3 சவரன் நகைகளை வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து வீடியோவை காட்டி மிரட்டி பணம், நகை வசூல் செய்ய வந்துள்ளனர். இதை பொறுத்துக்ககொள்ள முடியாத அந்த பெண், கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.