தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 1:54 pm
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டாலும், மன உளைச்சல்தான் காரணம் என கூறப்படுகிறது. தந்தையின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானாலம், தொடர்ந்து மனோஜ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
அப்பன் பெயரை காப்பாத்த முடியலையா என அவரை சுற்றி வந்த குரல்கள்தான் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட காரணமாக அமைந்தன. நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநராக அவதாரம் எடுத்தும் பலனில்லாமல் போனது.
8 வருடமாகவே ரொம்ப 😭#ManojBharathiraja pic.twitter.com/cTW2DCwMPX
— Valar Mahesh (@Valarmahesh) March 25, 2025
8 வருடமாக சினிமாவில் நான் இல்லை, என்ன செய்ய போகிறோம் என யோசித்தேன், தற்கொலை முடிவுக்கு கூட சென்றேன், ஆனால் எனக்கு பக்கபலமாக இருந்தது என் மனைவியும் மகள்களும்தான் என மனோஜ் உருக்கமாக பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.