நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2025, 4:24 pm

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம் நிலையூரை சேர்ந்த அஜய் (29) ஆகிய இருவரும் ஏற்கனவே வேறொருவர்களுடன் முதல் திருமணம் நடந்துமுடிந்து விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் அமலாவிற்கும், அஜய்க்கும் இரண்டாவது திருமணம் செய்துவைப்பதாக கூறி அஜயின் பெற்றோர் அமலாவின் தாயாரிடம் பேசியுள்ளனர்.

இதனிடையே இருவரும் காதலித்து வந்ததோடு அவ்வப்போது தனிமையிலும் இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது இதனிடையே கடந்த ஆண்டு ஐராவதநல்லூரின் அமலாவின் வீட்டில் அவரது தாயார் முன்பாக அமலாவும், அஜயும் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சில நாட்களிலயே அமலாவுடன் தனிமையில் இருந்தபோது அமலா கர்ப்பமானாதாக கூறப்படுகிறது. பின்னர் அமலாவின் தாயார் சில நாட்களிலயே உயிரிழந்த நிலையில் அமலாவை விட்டுவிட்டு அஜய் அவரது பெற்றோருடன் சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்து இன்னொரு பெண்ணை அஜய்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்ததாகவும் இது குறித்து அமலா நேரில் சென்று தான் அஜயால் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே என்னுடன் அஜய்க்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு 50 லட்சம் ரூபாய் வரதட்சனை கொடுத்தால் உனக்கும் என் மகன் அஜய்க்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என பெற்றோர்கள் கூறியதாகவும், மேலும்., ஏதாவது பிரச்சனை செய்தால் உன்னை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் அமலா மீண்டும் அஜயையும் அவரது பெற்றோரையும் சந்தித்து திருமணம் குறித்து முறையிட்டபோது அமலாவை அடித்ததில் அமலாவின் கர்ப்பம் கலைந்ததாகவும் கூறி, தனது காதலுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு அமலா தெப்பகுளம், திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்., எல்லை குழப்பம் என மாறி மாறி அலைக்கழித்துள்ளனர். இதனால் நேற்று மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அமலா புகார் அளித்துள்ளார்.

அப்போது காவல்துறையினர் விசாரணைக்காக அஜய் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்தில் வைத்து அஜய் மற்றும் அஜயின் பெற்றோர்கள் தன்னை தவறாக பேசுவதாக கூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் தனக்கு காவல்நிலைய எல்கை பிரச்சனை என கூறி அஜயால் ஏமாற்றப்பட்ட தன்னை அஜயின் தந்தை அவதூறாக பேசுவதாகவும், தனது மகனுக்கு பதிலாக தன்னுடன் இருக்க கட்டாயப்படுத்துவதாகவும், தனது மகனுடன் திருமணம் செய்து வைக்க 50 லட்சம் வேண்டும் எனவும், நீ் யாரிடம் வேண்டுமானால் சொல் என கூறி முதலமைச்சர், காவல்துறையினர் என அனைவரையும் ஆபாசமாக பேசி தன்னையும் மிரட்டுவதாக கூறி ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்தார். அப்போது புகார் மாநகர காவல் ஆணையர் எல்கைக்கு உட்பட்ட பகுதி என்பதால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அஜய் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பின்னர் விவாகரத்து பெற்றதும் அதேபோல் அமலா என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி அவரும் முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Father who spoke disparagingly of his son's girlfriend!

தனது காதலின் அஜயின் தந்தை தன்னிடம் பேசியபோது, நீ மாசமா போ நாசமா போ, என் மகன்லாம் சுஜூபி என்னைய நீ வச்சுக்கோ அவன விடு நான் நல்லா பாத்துக்குவேன், என் மகன் அஜய் வேணும்னா எனக்கு அரைகோடி வேணும் – மகனை காதலித்த பெண்ணிடம் பேசிய காதலனின் தந்தை.

இதையும் படியுங்க: மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உங்க பொன்னு வயசு தான் நான் என்ட இப்படி பேசுறீங்க…, அவனவன் பொண்ணுகூடவே இருக்கானுக என ஆபாசமாக பேசியதாகவும், நீ திருப்பரங்குன்றம் கோவில் போனாலும் சரி, பாண்டி கோவில் போனாலும் சரி அஜய் வேணும்னா 50 லட்சம் ரூபாய் வேணும், நான் வீடு கட்டனும் என மகனின் காதலியிடம் பேசிய காதலனின் தந்தை, ஸ்டாலினோ, எடப்பாடியோ, ஐஜியோ யார்ட வேணா சொல்லு என் முடிய கூட புடுங்க முடியாது என பேசியதாகவும் அஜயின் தந்தை பேசிய ஆடியோ உரையாடலையும் வெளியிட்டார்.

Boy Friend Cheated his Girl Friend

புகார் குறித்து பேசிய அமலா, தனக்கு அஜயுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும், தன்னை ஆபாசமாக பேசிய அஜயின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் அளிக்க சென்றால் காவல்துறையினர் தன்னை இழிவாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அஜய் மற்றும் அவரது தந்தையிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர்களது செல்போன் எண் அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Leave a Reply

    Close menu