ஐபிஎல் கிரிக்கெட்டே கிடையாது..தடை பண்ணுங்க..குஜராத் அணி பவுலர் ஆவேசம்.!
Author: Selvan27 March 2025, 2:09 pm
இது கிரிக்கெட் இல்லை,பேட்டிங்!
18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதையும் படியுங்க: ‘வீர தீர சூரன்’ படத்திற்கு தடை… ரசிகர்கள் ஏமாற்றம்..!
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது.கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார்.அவரின் அதிரடி இன்னிங்சால்,பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோர் கிடைத்தது.

244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் விளாசினார்.ஆனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் பஞ்சாப் ஐபிஎல் 2025 சீசனில் முதல் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேன் ஆஃப் தி மேட்ச் விருது ஸ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
ஆட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஜராத் அணியின் நட்சத்திர பவுலர் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியது “ஒவ்வொரு மைதானத்திலும் பேட்டிங்கை ஆதரிக்கும் வகையில் பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது.இதனால்,இனிமேல் இதை ‘கிரிக்கெட்’ என்று சொல்ல வேண்டாம் ‘பேட்டிங்’ என்று சொன்னால் சரியாக இருக்கும்.
சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங் இடையே சமநிலை இருக்க வேண்டும்.அது தற்போது இல்லை” என கூறினார்.
இதனால் இந்த சீசனில் நட்சத்திர பவுலர்கள் பலர் தங்களுடைய மோசமான சாதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்,RR அணியின் நட்சத்திர பவுலரான ஆர்ச்சர் ஐபிஎல்-லில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ரன்களை விட்டு கொடுத்த என்ற மோசமான சாதனயை படைத்தார்
ரபாடாவின் இந்த கருத்து,பிட்சுகளின் தரம் குறித்த சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளது.ஐபிஎல் நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.