ஃபயர் மோடில் ‘ராம் சரண்’…பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்.!
Author: Selvan27 March 2025, 6:45 pm
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகி வருடம் அவருடைய 16வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டு ராம்சரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!
‘பெடி (PEDDI)’ என வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை,தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா’ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்குகிறார்.ராம் சரணுக்கு மிக வித்தியாசமான தோற்றத்தையும்,கதாபாத்திரத்தையும் இயக்குநர் உருவாக்கியுள்ளார்,போஸ்டரில் அவருடைய லுக் புஷ்பா படத்தின் அல்லு அர்ஜுன் கெட்டப்பை போல் உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முதல் போஸ்டரில்,மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் ராம் சரண் இருக்க இரண்டாவது போஸ்டரில் பீடி பிடித்துக்கொண்டு மாஸான லுக்கில் தோன்றுகிறார்.இந்த இரு போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘கேம் சேஞ்சர்’ பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் ‘பெடி’ திரைப்படம், ராம் சரணுக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.