அடிச்சு நொறுக்கிய பூரான்..இதுவரை யாரும் செய்யாத ரெகார்ட்…!

Author: Selvan
28 March 2025, 6:30 pm

புரட்டி எடுத்த பூரான்

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து,ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.இதுவரை அவர் நான்கு முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

அடுத்த இடங்களில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் தலா மூன்று முறை இந்த சாதனையை செய்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.அவரது ஸ்ட்ரைக் ரேட் 269.23 ஆகும்.,அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் மோசமான தொடக்கத்தைக் கொடுத்தார்.அவர் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார்.நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.

இவர்கள் அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றி எளிதானது. லக்னோ அணி 16.1 ஓவரில் வெற்றி இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டியது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Leave a Reply