96 படம் போல நடந்த மீட்டிங்.. மனைவிக்கு துளிர் விட்ட கள்ளக்காதல் : 3 உயிர்களை பறித்த உல்லாசக் காதல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2025, 3:56 pm

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 ) – ரஜிதா ( 35 ) தம்பதிக்கு சாய்கிருஷ்ணா (12), மதுப்ரியா (10), மற்றும் கௌதம் (8) ஆகிய பிள்ளைகளுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி இரவு தனது பிள்ளைகள் தயிர் சாதம் சாப்பிட்டதாகவும் அதன் பிறகு இறந்துவிட்டதாகவும் தனக்கும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் ரஜிதா நாடகம் ஆடினார்.

இதையும் படியுங்க: மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாதிரியார்.. பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்!

செக்யூரிட்டி வேலைக்கு சென்ற சென்னய்யா இரவு பணியில் இருந்து வீட்டிற்கு பாதியிலேயே வந்து சென்னய்யா மனைவி ரஜிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

தயிர் சாதம் சாப்பிட்டதில் மூன்று குழந்தைகள் இறந்ததாக அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனையை தொடங்கினர். இதில் முதலில் சென்னய்யா மீது சந்தேகத்தின்படி போலீசார் முதலில் விசாரனை செய்தனர்.

அதன் பிறகு அவரது மனைவி ரஜிதாவிடம் விசாரித்து அவரது மொபைல் எண்னை போலீசார் ஆய்வு செய்ததில் ரஜிதா வேறு யாருடனே அதிக நேரம் பேசியதை உறுதி செய்த போலீசார் ரஜிதாவிடம் தங்கள் பாணியில் விசாரிக்க தொடங்கினர்.

இதில் ஏற்கனவே கணவர் தன்னைவிட 20 வயது அதிகமானவர் என்ற விரக்தியில் இருந்த ரஜிதாவிற்கு அவருடன் பத்தாம் வகுப்பில் படித்த சக நண்பரான சிவக்குமாருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பது தெரிய வந்தது.

Woman Killed her 3 Childrens

சமீபத்தில் நடந்த முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற ரஜிதா அப்பொழுது சக நண்பரான சிவக்குமாருடன் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியதும் சிவகுமார் தனது தங்கைகளுக்கு திருமணமான பிறகு ரஜிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதனால் அவ்வாப்போது இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். தனது கள்ளக்காதலுடன் வாழ்வதற்கு இடையூறாக இருக்கும் குழந்தைகளை சம்பவ நாளில் குழந்தைகள் தூங்கிய பின்னர் அன்று இரவு ஒருவர் பின் ஒருவரை முகத்தில் தலையனை வைத்து அமுக்கி முச்சு விடமுடியாமல் தனது மூன்று பிள்ளைகளை கொலை செய்து சாகடித்து தயிர் சாதத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் இறந்ததாகவும் ரஜிதா தனக்கு வயிற்று வலி போன்று நாடகம் ஆடியதும் அம்பலமானது.

woman killed her 3 children to marry ex-classmate

இதனை அடுத்து போலீசார் ரஜிதா மற்றும் அவரது காதலன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 96 படத்தில் வருவது போன்று 10 வகுப்பு படிப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்து மூன்று பிள்ளைகளை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
  • Leave a Reply