தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 3:53 pm
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த இந்த வழக்கு, பல பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: டீக்கடைக்குள் புகுந்த லாரி… விபத்தில் சிக்கிய குழந்தை : 5 பேர் படுகாயங்களுடன் அனுமதி!
சமீபத்தில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
2019ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதாக முதல்வர் குற்றம் சாட்டினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இதனை மறுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதிலளித்தார். இந்த விவாதம், இவ்வழக்கின் முக்கியத்துவத்தையும், அரசியல் அரங்கில் இதன் தாக்கத்தையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் தடுக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பல கைதுகள் செய்யப்பட்டிருந்தாலும், முழுமையான விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில் இந்த பாலியல் குற்ற வழக்கு இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரத்தையும், அதனை தடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
இந்த பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.இந்த வழக்கு – அரசுத்தரப்பு சாட்சி விசாரணை முடிந்தது அடுத்து அதுதொடர்பாக கேள்விகள் கேட்பதற்காக குற்றச்சாட்டப்பட்ட 9 பேரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டக் காவல் துறையினர் முதலில் விசாரித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), சதீஷ் (28), மணிவண்ணன்(25) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டும், தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஹேரேன் பால்(29), பாபு என்ற பைக் பாபு(34), அருளானந்தம்(34), அருண்குமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் தற்பொழுது கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.