வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2025, 1:11 pm
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம்.
ஆனால் இங்கு ஒரு ஜோடி என்னமோ எழுதிக்கேங்க, என்னமோ சொல்லிட்டு போங்க எங்களுக்கு என்ன என்று ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.
இதையும் படியுங்க: வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…
அந்த ஜோடி வேறு யாருமில்லைங்க, நம்ம விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும்தான். இருவரும் தங்களது கேரியரில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ராஷ்மிகா, அடுத்தடுதது பாலிவுட் படங்களில் நடிப்பதால் தென்னிந்தியா பக்கமே வருவதில்லை.

ராஷ்மிகா தற்போது பான் இந்தியா நடிகையாக உச்சம் தொட்டுள்ளார். இவர் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பதுடன், வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதை கெட்டியாக அம்மணி பிடித்துக்கொண்டார்.

அதே சமயம், சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போதே காதல் வலையில் சிக்கினார். விஜய் தேவரகொண்டாவுடன் பேச்சு எழுந்து வருகிறது. ஆனால் இருவரும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.

தற்போது ஒமன் நாட்டிற்கு இருவரும் ட்ரிப் அடித்துள்ளனர். ஆனால் தனித்தனியாக இருவரும் இன்ஸ்டாகிராமில் போட்டோவை பதிவிட்டுள்ளனர்.

தனியாக புகைப்படம் எடுத்தாலும், ஒரே லொகேஷனில் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடற்கரை ஓரம் உள்ள ரிசார்ட்டில் இருவரும் தங்ககியுள்ளது தெரியவந்துள்ளதாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
