திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ
Author: Prasad7 April 2025, 1:55 pm
எகிறிவரும் எதிர்பார்ப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் வருகைக்கு ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் தங்களது FDFS கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்…
திருநெல்வேலியில் அமைந்துள்ள PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கத்திற்கு வெளியே “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி அஜித்திற்கு மிக உயர கட் அவுட் ஒன்று வைக்க ரசிகர் மன்றம் சார்பாக முடிவெடுக்கப்பட்டது. அதன் படி கட் அவுட் பாதி முடிவடைந்த நிலையில் அந்த கட் அவுட் திடீரென சரிந்து விழுந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் தலை தெறிக்க ஓடினர்.
எனினும் கட் அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.