என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2025, 7:51 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி.

இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காஜுவாக காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் காவல் ஆய்வாளர் அறையில் ஆய்வாளர் எதிரே அமர்ந்திருந்த நரேஷ் என்பவரை சென்ற நேரத்தில் தனது செருப்பை கழட்டி முகத்தில் அறைந்தார்.

இதையும் படியுங்க: கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

இதனை கண்ட காவல் ஆய்வாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் அவர் வெளியே செல்லக்கூடாது என்று அங்கே அமர வைத்தார்.

இது தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகிய பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக பெண் மாவட்ட தலைவரை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Shruti spoke boldly after the leaked video அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!
  • Leave a Reply