மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2025, 2:08 pm
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க்க ஷங்கரின் கை,கால்கள் ஆகிய உடல் பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டது. அதேபோல் மேலும் சில மாணவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: அம்பேத்கரை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு குட்டு.. ஒரு மாதம் தான் கெடு : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் உடனடியாக மார்க் சங்கர் உள்ளிட்ட தீக்காயத்திற்கு ஆளானவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த தகவலை அறிந்தவுடன் அதிகாரிகள் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர்கள் அவர் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
ஆனால் அரக்கு அருகே உள்ள குரிடி பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்குச் செல்வதாக நேற்று அந்த கிராமத்தினருக்கு நான் உறுதியளித்திருந்தேன்.

எனவே நான் அந்த கிராமத்திற்குச் சென்று, அவர்களிடம் பேசி, அங்குள்ள பிரச்சினைகளைக் கேட்ட பின்னரே செல்வேன் என்றார்.
எனவே அங்கு சென்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை முடித்துவிட்டு சுற்றுப்பயணம் செய்த பிறகு பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தை வர உள்ளார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.