அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

Author: Prasad
8 April 2025, 4:00 pm

தயாராகி வரும் கொண்டாட்டங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கான கொண்டாட்ட மனநிலையில் 10 ஆம் தேதிக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

good bad ugly first show in madurai is in trouble

டிக்கட் கட்டணம்

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு பெரிய நடிகர் நடித்த திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை அதிகமாக விற்பது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில் மதுரையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.. ரூ.500-க்கு டிக்கெட் விலையை நிர்ணயிக்கவில்லை என்றால் முதல் காட்சி கிடையாது எனவும் மதியம் 12 மணிக்குத்தான் முதல் காட்சியை தொடங்கவேண்டும் எனவும் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம்.

ஆனால் ஐநாகஸ், கோபுரம் போன்ற திரையரங்கங்கள் முதல் காட்சியின் டிக்கெட் விலையை ரூ.190க்கு நிர்ணயித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது. இதன் மூலம் தனி திரையரங்குகளில் ரூ.500க்கு டிக்கெட் விலை நிர்ணயித்தால் எப்படி டிக்கெட் விற்பனை ஆகும் என கேள்வி எழுந்துள்ளதாம். இதனால் மதுரையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Leave a Reply