திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2025, 2:27 pm
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, எத்தனை மருத்துவக்கல்லூரிகள் நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் சிவசங்கர், வடிவேறு படத்தில் வரும் வசனத்தை மேற்கோள் காட்டி, பேக்கரி டீலிங் அதிமுக செய்ததால் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிட்டீர்கள் என சாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் சில கருத்துக்களை சொல்கிறார் நீட் தேர்வை பற்றி சொல்கிறார் நீட் தேர்வு பற்றி பலமுறை விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீட் 2010 டிசம்பர் 21-ல் நோட்டிபிகேஷன் வெளியிட்டார்கள் அப்போது திமுக மத்தியில் கூட்டாட்சியில் இருந்தது திமுக வின் காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போது தான் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது நீட்டை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ்..
அதை தடுப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் முடியவில்லை நீதிமன்றம் சென்று விட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினோம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 2021-ல் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் இந்தியா கூட்டத்தில் அங்கம் வகித்தோம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று சொல்கிறார்.
2010ல் கொண்டு வரும் பொழுது ரத்து செய்திருக்கலாம் அல்லவா அப்பொழுதும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இருந்தீர்கள் இதற்கு காரணம் திமுக தான். முதலமைச்சர் துடிக்க பேசுகிறார். நாங்கள் கூட்டணி வைத்தால் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏன் பதறுகிறார் ஏன் கோபப்படுகிறீர்கள்.
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் இது எங்களுடைய கட்சி. நாங்கள் வெற்றி பெற வேண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்களும் பலம் வாய்ந்த அணியை 2026 சட்டமன்ற தேர்தலில் அமைப்போம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
முதலமைச்சர் பேசுவதை பார்த்தால் அவருக்கு பயம் வந்துவிட்டது அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டு விட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் தி மு க ஆட்சி எடுக்கும் அதிமுக ஆட்சி வரும் என்று அவர் மனதில் வந்த காரணத்தினால் அதன் வெளிப்பாடு பார்க்கப்படுகிறது சட்டமன்றத்தில் நான் நேருக்கு நேர் பார்த்தேன் அவர் பதற்றப்படுகிறார் அவர் பேச்சிலிருந்து வார்த்தைகளை பார்த்தேன்..
அதிமுகவை பொறுத்தவரை திமுகவை அகற்றப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் . கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது ஒரு கருத்தை சொல்லி வைக்கிறார் ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என்று சொல்லி இருக்கிறார்..
1999ல் முரசொலி மாறன் நெருக்கடி நிலையின் போது நாங்கள் திமுக காங்கிரசை விட்டு விலகிட்தோம். இப்போது நாங்களும் ஜனசங்கம் பாரதிய ஜனதா உறுப்பினரும் மார்க்சிஸ்ட் தோழர்களும் சிறையில தோழர்கள் ஆனோம். ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும்..
சிறுபான்மை மக்களிடம் பாஜகவை பற்றி ஒரு சில கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அது உண்மைதான் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் அதற்கு ஈடு கொடுத்து அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
நீங்கள் இணைந்து பணியாற்றும் பொழுது இனிச்சது இப்ப கசக்குதா.? முரசொலி மாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தார்கள். திமுகவிற்கு சாதகமாக இருந்தால் பாராட்ட அவர்கள் பாதகமாக இருந்தால் எங்கள் மீது பழி சுமத்துவார்கள்,
திமுகவிற்கு தான் அந்த டீலிங் எல்லாம் உண்டு. திமுக அலுவலகத்தில் முதல் தளத்தில் ரெய்டு நடந்து கொண்டிருந்தது கீழே கூட்டணி பேச்சு வார்த்தை அது அவர்களுடைய டீலிங். இவ்வாறு அவர் பேசினார்.