அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2025, 6:17 pm
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை துவக்கி வைப்பதற்காக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் ஹைதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்.
இதையும் படியுங்க: பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!
அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டர் தரை இறங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் ஹெலி பேட் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஹெலிகாப்டர் பைலட் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலி பேடை தவிர்த்து நேராக நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு வந்து அங்கு ஹெலிகாப்டரை இறக்கினார்.
அப்போது ஹெலிகாப்டர் ஏற்படுத்திய காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மற்றும் ஸ்டால்கள் ஆகியவை காற்றில் பறந்து சரிந்து விழுந்தன.

இந்த சம்பவத்தில் ஒரு சிலர் லேசான காயமடைந்தனர். ஹெலிகாப்டர் இறங்கியபோது பறந்த புழுதி அங்கு வந்திருந்த பொதுமக்களை அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடிக்க வைத்தது.
ஹெலிகாப்டரில் அமைச்சர்கள் : சரிந்து விழுந்த நுழைவு வாயில்!#Trending | #Telangana | #helicopter | #viralvideo | #updatenews360 pic.twitter.com/einc3COacN
— UpdateNews360Tamil (@updatenewstamil) April 21, 2025
அதிகாரிகளிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு வந்து சேர்ந்தது என்று கூறப்படுகிறது.