திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2025, 6:20 pm
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
அஜித்தின் பழைய கெட்டப், புது கெட்டப் என படம் முழுக்க தலமயம்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
முக்கியமாக படத்தில் நடித்த பிரியா வாரியருக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். சிம்ரன் ஆடிய நடனத்தை இந்த படத்தில் ரீ கிரியேட் செய்திருப்பார் பிரியா வாரியர்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படம் வெளியான பிறகு பிரியா வாரியரை பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக அழைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் FANTASY CRICKET APP LAUNCH நிகழ்ச்சியில் கலந்துொண்ட பிரியா வாரியரை ஒரு வீடியோ அதிர்ச்சிக்குள் ஆக்கியது.
இதையும் படியுங்க: ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!
அதாவது, தொகுப்பாளினியான VJ பாவனா, திரையில் ஒரு வீடியோ ஒளிபரப்ப செய்வார். அதில் தோன்றிய விஜய், குட் பேட் அக்லி படம் பார்த்தேன் உங்க டான்ஸ் சூப்பரா இருந்துச்சு, சிம்ரன் ஆடிய இன்னொரு பாட்டுக்கு நீங்க இப்பே ஆட முடியுமா என கேட்பார்.
இதைப் பார்த்து ஷாக்கான பிரியா வாரியர் கண்ணில் கண்ணீர் விட்ட படி எனக்கு புரியல, நிஜமாவா இது, இன்னொரு தடவ போட சொல்லுங்க என கூறும் போது, தொகுப்பாளினி பாவனா, இது AI வீடியோ, சாரி என சொல்வார்.

கடுப்பான பிரியாவாரியர், இது ரொம்ப டூ மச், தப்பு தப்பு ரொம்ப தப்பு என கூறுவார். உடனே பாவனா, லாஞ்சுக்கு வந்த புள்ளயை இப்படி அழுக விட்டுட்டீங்களே என்றும், விஜய் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை பாராட்டுவார் என கூறி பிரியா வாரியரை சமாதானப்படுத்துவார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது ரொம்ப ஓவர், யாரா இருந்தாலும் அதை உண்மை என்று தான் நினைப்பார்கள், ஒரு வளர்ந்து வரும் நடிகையை பாராட்டுவது போல AI வீடியோ போட்டு ஏமாற்றுவது தப்பு என கூறி வருகின்றனர்.
