இதுக்கு பேர்தான் கம்பேக் ஆ? கேங்கர்ஸ் படத்தை ரவுண்டு கட்டும் விமர்சனங்கள்! இதுவும் போச்சா?
Author: Prasad24 April 2025, 1:10 pm
சுந்தர் சி-வடிவேலு காம்போ
கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. இதனை சுந்தர் சியே இயக்கியுள்ளார். இதில் சுந்தர் சி-க்கு ஜோடியாக கேத்ரின் த்ரேஸா நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன், வாணி போஜன், பகவதி பெருமாள், மைம் கோபி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பிரத்யேக காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதனை பார்த்த பல விமர்சகர்கள் இத்திரைப்படத்தை குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வடிவேலுவுக்கு கம்பேக்கா?
இத்திரைப்படம் வடிவேலுவுக்கு நிச்சயம் கம்பேக் ஆக இருக்கும் என கூறுகின்றனர். அதாவது படத்தின் முதல் பாதியில் வடிவேலுக்கான இடம் அதிகம் இல்லையாம். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி முழுக்க வடிவேலு தனது நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரித்த வைத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
அதே போல் இது முழுநீள காமெடி திரைப்படம் இல்லை எனவும் படத்தின் முதல் பாதி முழுக்க ஒரு கமெர்சியல் படத்திற்கான காட்சிகளுடன் படம் நகர்கிறது, இரண்டாம் பாதிதான் முழுக்க காமெடிகளால் நிறைந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
திரைப்படத்தில் சுந்தர் சி தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் கேத்ரின் த்ரேஸா, பகவதி பெருமாள், வாணி போஜன் என பலரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் எனவும் கூறுகின்றனர்.
படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அதிகம் இருந்தாலும் படம் முழுக்க தொய்வில்லாமல் குடும்பத்தோடு ரசித்து பார்க்ககூடிய திரைப்படமாக “கேங்கர்ஸ்” அமைந்துள்ளதாக விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். “இதுவும் போச்சா” என்ற ஒற்றை வரி விமர்சனத்திற்கு வடிவேலு இதில் இடம் கொடுக்கவில்லை என இந்த பாஸிட்டிவ் விமர்சனங்கள் மூலம் தெரிய வருகிறது.