கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?
Author: Prasad24 April 2025, 6:31 pm
வடிவேலு-சுந்தர் சி கம்பேக்
கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. இத்திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை ரோலில் வெகு கால இடைவெளிக்குப் பின் நடித்துள்ளார். இதி சுந்தர் சிக்கு ஜோடியாக கேத்ரின் த்ரேஸ் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் வாணி போஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்
இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வடிவேலுவுக்கு நிச்சயம் இது கம்பேக் என்றே கூறுகிறார்கள். மேலும் இரண்டாம் பாதி முழுக்க வடிவேலுதான் தனது காமெடி காட்சிகளின் மூலம் தாங்கிப் பிடிக்கிறார் என்று கூறுகின்றனர்.
மேலும் இத்திரைப்படம் குடும்பத்துடன் ரசிக்க கூடிய ஒரு காமெடி திரைப்படமாக வெளிவந்துள்ளது எனவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு டிவிஸ்ட் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதாவது “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான Lead-ஐ வைத்து இத்திரைப்படத்தை முடித்திருக்கிறாராம் சுந்தர் சி. இத்தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.