எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?
Author: Prasad24 April 2025, 7:27 pm
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டிரைலரை அல்ஃபோன்ஸ் புத்திரன் கட் செய்திருந்தார். தனது வித்தியாசமான ஸ்டைலில் இந்த டிரைலரை கட் செய்திருந்தார் அல்ஃபோஸ் புத்திரன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
இது அவருக்காக எழுதுன கதை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜ் இத்திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது இத்திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினாராம்.
ரஜினிகாக இந்த கதையை எழுதிய போது ஆக்சன் கதையாக எழுதினாராம். அதன் பின் இதில் கொஞ்சம் காதலை சேர்த்து சூர்யாவிடம் கூறினாராம்.
