இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!
Author: Prasad24 April 2025, 7:56 pm
ஸ்ட்ரெஸ் பஸ்டர்
பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயணம் வெற்றிகரமாக தற்போது 6 ஆவது சீசன் வரை வந்துள்ளது.

விரைவில் “குக் வித் கோமாளி சீசன் 6” தொடங்கவுள்ளது. கடந்த சீசனில் புதிதாக நடுவராக நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ் 6 ஆவது சீசனிலும் நடுவராக தொடரவுள்ளார். அதே போல் இவருடன் செஃப் தாமுவும் நடுவராக தொடரவுள்ளார். இந்த நிலையில் 6 ஆவது சீசனில் மூன்றாவதாக ஒரு புது நடுவர் இணையவுள்ளார். இந்த தகவலை வீடியோ வெளியிட்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Mad Chef
அதாவது பிரபல செஃப் ஆன கௌஷிக் “குக் வித் கோமாளி” 6 ஆவது சீசனில் மூன்றாவது நடுவராக இணையவுள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் “Master Chef” நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவரை Mad Chef என்றும் அழைப்பார்கள். இந்த நிலையில் இவர் மூன்றாவது நடுவராக இணைந்துள்ளார். இந்த சீசனில் மூன்று நடுவர்கள் என்பதால் நிகழ்ச்சி களைகட்டப்போவது உறுதி என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
