அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!
Author: Prasad26 April 2025, 11:51 am
சோகத்தில் சென்னை ரசிகர்கள்
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43 ஆவது லீக் போட்டியான இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 154 ரன்களை குவித்தது.
இதனை சேஸ் செய்த ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ளது. ஆதலால் பிளே ஆஃபிற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும் சென்னை ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது நேற்று அஜித்தையும் சிவகார்த்திகேயனையும் மைதானத்தில் ஒன்றாக பார்த்ததுதான்.
திடீரென தோன்றிய இருவர்…
அதாவது சிவகார்த்திகேயனும் அஜித்தும் தங்களது குடும்பங்களுடன் நேற்று ஐபிஎல் ஆட்டத்தை காண வந்திருந்தனர். சிஎஸ்கே விளையாடிய விதம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில் அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்தது அஜித்தும் சிவகார்த்திகேயனும்தான். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
