நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?
Author: Udayachandran RadhaKrishnan28 April 2025, 1:16 pm
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர் பெற்றவர் ஆர்யா.
இவர் 2018ல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ மூலம் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதாக அறிவித்தார்.
இதற்காக ஆர்யாவை விரும்பும் 16 பெண்களை தேர்வி செய்து அதில் ஒருவரை திருமணம் செய்வது என்ற முடிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படியுங்க: 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்
ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி, பின்னர் இது வெறும் பார்வையாளர்களை கவரத்தான் என்பது புரிந்து பேசுபொருளாக மாறியது.
இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் நடிகை சங்கீதா. இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போதே, ஆர்யாவுக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ளார். நிஜமாவே நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறாரா என கேட்டுள்ளார்.
அதற்கு அவரோ, எனக்கு வாழ்க்கை துணை தேவையென்பதால்தான் இந்த நிகழ்ச்சி என கூறினார். ஆனால் நிகழ்ச்சியை தொடங்கிய சில நாட்களில், ஆர்யா யாரையும் திருமணம் செய்ய போவதில்லை என தெரியவந்தது.

இது குறித்து பேசிய சங்கீதா, இது ரொம்ப தப்பு, மக்களை ஏமாற்றுவது தவறானது, இது போன்ற நிகழ்ச்சகிளை நடத்தக் கூடாது என எதிர்தார். ஆனால் அது எடுபடாமல் போக, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்

இதனால் சங்கீதா மீது ஏராளமான விமர்சனங்கள் வந்தது. காசு வாங்கும் போது இது தெரியலையா? இப்போது மட்டும் தப்புனு தெரியுதா? என சரமாரி விமர்சிக்க தொடங்கினர்.
மக்களின் உணர்வுகளை தவறாக பயன்படுத்தியதாக பெண்கள் கூட்டமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கும் தொடர்ந்தது. இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை. 2019ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
