ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 3:55 pm
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அபராமாக விளையாடினார்.
இதையும் படியுங்க: நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!
கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி தள்ளினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசிய அவர் 101 ரன்கள் எடுத்து அதிவேக சதம் அடித்த முதல் இந்தியராகவும், ஐபிஎல் போட்டியில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்,
இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. சூர்யவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசை அறிவித்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், கடந்த ஆண்டு சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்தித்தேன். தற்போது இந்த சாதனை படைத்த அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை கூறினேன்

அவருக்கு ரூ.10 லட்சம் பரிசை இந்த அரசு வழங்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடி பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
