ரோஜாப்பூ போன்ற செக்கச் சிவந்த மென்மையான சருமத்தை பெற இவற்றை உண்டு வந்தாலே போதும்!!!
Author: Hemalatha Ramkumar28 May 2022, 6:28 pm
நமது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள கடைகளில் கிடைக்கும் பலவிதமான க்ரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அவை நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதை தவிர்த்து நாம் சாப்பிடும் உணவின் மூலமாகவே நம்முடைய சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.
* தினசரி நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்ப்பதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். குறிப்பாக ஆப்பிள், மாதுளை, ஸ்டிராபெர்ரி, செர்ரி, ஆரஞ்சு, பப்பாளி ஆகிய பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது தழும்புகளை குறைத்து சருமத்தை பொலிவாக்க வைத்திருக்க உதவுகிறது.
*குங்குமப்பூவை தினமும் பாலில் கலந்து குடிப்பத்தால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். பால் மற்றும் குங்குமப்பூ இரண்டையும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவடையும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்க குங்குமப்பூ மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து அதனை முகத்தில் ஸ்கரப் போல பயன்படுத்தி வரலாம்.
*ஒரு கேரட், புதினா இலைகள், இஞ்சி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, பின்பு அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். இதை முறையாக பின்பற்றினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்தது, ஆரோக்கியத்துடனும் , அழகாகவும் இருக்கலாம்.
*தினமும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்து விட்டு. கிரீன் டீ குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் முக அழகு இரு மடங்காக அதிகரிக்கும்.
*தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களும் புத்துணர்ச்சி பெறும். தக்காளி சாறு முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் எண்ணெய் பசையை நீக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.
*பப்பாளி பழத்தில் அதிகளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாக இருக்கும். பப்பாளி பழம் செரிமானத்திற்கு உதவி செய்வதால் இது உடல் எடையை குறைக்க உதவும்.
*ப்ராக்கோலியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* நார்ச்சத்து பசலைக் கீரையில் அதிகம் உள்ளதால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் பசலைக்கீரையில் உள்ளது.
*தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
*பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான சருமத்தை பெற தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காகவும் போடலாம்.
*சோயா பொருட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தடுக்கும்.
0
0