சாமந்திப்பூ ஒன்னு இருந்தாலே உங்க சரும பிரச்சினை எல்லாத்துக்கும் முடிவு கட்டிடலாம்!!! 

Author: Hemalatha Ramkumar
4 November 2024, 5:32 pm

சாமந்தி பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் நம்முடைய அழகை மேம்படுத்துவதற்கும் பல்வேறு வகையில் உதவுகிறது. வீக்க எதிர்ப்பு மற்றும் ஆற்றும் பண்புகள் நிறைந்த இந்த சாமந்தி பூக்கள் பல சரும பராமரிப்பு ப்ராடக்டுகளில் முக்கியமான ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வீக்க எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்த சாமந்திப்பூக்கள் முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது, குறிப்பாக இது எண்ணெய் அல்லது வறண்ட சருமம் கொண்ட நபர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. சாமந்திப்பூ நம்முடைய சருமத்திற்கு எப்படி நன்மை அளிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

எக்ஸிமா 

எக்ஸிமா என்ற பொதுவான சரும பிரச்சனை வறண்ட சருமம், தடிப்பு மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது வீக்கம் காரணமாக வருகிறது. இந்த சூழ்நிலையில் சாமந்திப்பூவில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் எக்ஸிமாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. 

சருமத்திற்கான நீர்ச்சத்து

சாமந்தி பூவில் நீரேற்றும் பண்புகள் இருப்பதால் இது  சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. எனவே வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது கிரீமில் சாமந்திப்பூ இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

முகப்பருக்கள் 

நாம் ஏற்கனவே கூறியது போல சாமந்தி பூவில் வீக்க எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் நமக்கு தெளிவான சருமம் கிடைக்கும். 

இதையும் படிக்கலாமே: இத படிச்சா இஞ்சியை போல ஒரு அருமருந்து உண்டான்னு நிச்சயமா கேட்பீங்க!!!

கரும்புள்ளிகள்

சாமந்திப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கரும்புள்ளிகளை வெண்மையாக்குகிறது. உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்கிறது. கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை போக்குவதற்கும் இது உதவுகிறது. 

காயங்களை ஆற்றுகிறது

சாமந்தி பூவில் உள்ள பண்புகள் சிறிய அளவிலான காயம் அல்லது முகப்பரு தழும்புகளை போக்குகிறது. சாமந்திப்பூ எக்ஸ்ட்ராக்ட் கொண்ட ஆயின்மென்ட்டை இதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். 

சாமந்தி பூவை உங்களுடைய சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும்?

*வறண்டு சருமம் கொண்டவர்கள் சாமந்திப்பூ தேநீர் அல்லது எண்ணெயுடன் தேன் சேர்த்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். 

*எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சாமந்திப்பூ பேஸ்ட் மற்றும் களிமண் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவும். 

*சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் சாமந்தி பூவை வெள்ளரிக்காயுடன் கலந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவதன் மூலமாக பயனடையலாம்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!