இளமையான தோற்றத்திற்கு ரோஸ்மேரி எண்ணெய எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா…???

Author: Hemalatha Ramkumar
4 October 2024, 10:54 am

இன்று அத்தியாவசிய எண்ணெய்கள் பல்வேறு நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றான ரோஸ்மேரி எண்ணெய்  குறிப்பிடத்தக்க ஆற்றும் விளைவுகளை அளிக்கிறது. மனநலனை மேம்படுத்துவது முதல் ஞாபக சக்தியை தூண்டுவது மற்றும் கவனத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு நன்மைகள் ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்துவதால் கிடைக்கிறது. 

ஆனால் அதுமட்டுமல்லாமல் இந்த ரோஸ்மேரி எண்ணெய் உங்களுடைய சருமத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது. இதன் காரணமாக ரோஸ்மேரி எண்ணெய் பல்வேறு காஸ்மெட்டிக்ஸ் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அத்தியாவசிய எண்ணெயாக அமைகிறது. ரோஸ்மேரி செடியின் இலைகள் மற்றும் கிளைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயானது ஷாம்பூ மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்களின் உற்பத்தியில் உபயோகிக்கப்படுகிறது. இது தலைமுடி வளர்ச்சி மற்றும் முடி இழப்பை குறைப்பதற்கு உதவுகிறது. இப்போது ரோஸ்மேரி எண்ணெய் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது 

ரோஸ்மேரி எண்ணெயில் குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு பண்பு இருப்பதால் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் சரும துளைகளுக்குள் நுழைவதை தடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் சரும துளைகளில் அடைப்பு ஏற்படாத வண்ணம் அதில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. இந்த இரண்டு விளைவுகளின் காரணமாக ரோஸ்மேரி எண்ணெய் முகப்பரு ஏற்படுவதில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. அடிக்கடி முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரோஸ்மேரி எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாக நல்ல முடிவுகளை பெறலாம். 

சரும துளைகளை இறுக்குகிறது 

பெரிய சரும துளைகளை எண்ணி சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் விட்டீர்களா? ரோஸ்மேரி எண்ணெயின் இயற்கையான பண்புகள் உங்களுக்கு உதவும். சரும துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தை இறுக்கி அதன் அமைப்பை மேம்படுத்துகிறது. குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தங்களுடைய அன்றாட சரும பராமரிப்பு வழக்கத்தில் ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தினால் சருமத்தின் தெளிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம். 

மெல்லிய கோடுகளை நீக்குகிறது 

முன்கூட்டிய வயதான அறிகுறிகளான மெல்லிய கோடுகள் மற்றும் தோல் தொங்கி காணப்படுதல் போன்றவை ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக ஏற்படுகிறது. ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயில் உள்ள இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடுகிறது. எனவே ரோஸ்மேரி எண்ணெயை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தியோ அல்லது மூலிகை தேநீராக உட்கொள்வதன் மூலமாகவோ ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தை பெறலாம்.

கருவளையத்தை போக்குகிறது 

ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயில் உள்ள டையூரிட்டிக் பண்புகள் சருமத்தில் திரவம் தேக்கமாவதை குறைத்து கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. ரோஸ்மேரி எண்ணெயை கண்களைச் சுற்றி பயன்படுத்தும் பொழுது அது அந்த இடத்தில் அமைந்திருக்கும் திசுக்களில் உள்ள அதிகப்படியான திரவத்தை நீக்கி வீக்கத்தை குறைக்கிறது. எனவே உங்களுக்கு கருவளையம் இருந்தால் நிச்சயமாக ரோஸ்மேரி எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Rosemary oil, benefits of rosemary oil, skincare, skincare routine, acne remedy, premature ageing, ரோஸ்மேரி எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெயின் நன்மைகள்,

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 744

    0

    0