கொத்து கொத்தா முடி கொட்டினாலும் இந்த ஒரு பொருள் இருந்தா சூப்பரா சமாளிச்சுடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
14 September 2024, 6:28 pm

தற்போதைய இளைஞர்களின் தலைமுடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தலைமுடி வளர்ச்சியை இழப்பது மற்றும் தலைமுடி இழப்பை அனுபவிப்பது என்பது ஒரு சிலருக்கு மன அழுத்தத்தை கூட ஏற்படுத்தலாம். தலைமுடி வளர்ச்சியை மீட்டெடுக்க பல விதமான ஹேக்குகளை மக்கள் முயற்சித்து வருகின்றனர். அவற்றில் சில வேலை செய்தாலும் பல தோல்வி அடைந்து விடுகின்றன. ஒருவேளை நீங்களும் தலைமுடி உதிர்வு பிரச்சனையின் காரணமாக அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் இலவங்கப்பட்டை உங்களுக்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

இலவங்கப்பட்டையில் உள்ள சின்னாமிக் அமிலம் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து சிறந்த முடிவுகளை அளிக்கிறது. எனினும் வெறுமனே இலவங்கப்பட்டையை சாப்பிடுவது மட்டுமே தலைமுடி வளர்ச்சியை மீட்டமைக்காது. இதில் இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மேலும் இந்த ஆய்வில் ஆக்சிடாசின் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பது தெரியவந்துள்ளது.

எனினும் ஆக்சிடாசின் என்பது ஒரு பெரிய மூலக்கூறு. இதனால் தோலில் ஊடுருவ இயலாது. இதன் காரணமாக இதனை முடி இழப்பு சிகிச்சைகளில் பயன்படுத்துவது கடினம். இந்த இடத்தில் தான் தலைமுடி வளர்ச்சிக்கு சின்னாமிக் அமிலம் உதவுகிறது. இது தலைமுடி வளர்ச்சி விளைவுகளை அளிப்பதற்கு ஆக்சிடாசின் போல செயல்படுகிறது.

தலைமுடி வளர்ச்சியில் சின்னாமிக் அமிலத்தின் விளைவுகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் மயிர் கால்களில் பல்வேறு அளவுகளிலான சின்னாமிக் அமிலத்தை பயன்படுத்தினர். அதில் 500 மைக்ரோகிராம் அளவு வரையிலான சின்னாமிக் அமிலம் ஆக்சிடாசின் போல செயல்பட்டு தலைமுடியை வளர்ச்சியை ஊக்குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதிக அளவுகள் செல்களை சேதப்படுத்தும்.

இது சம்பந்தப்பட்ட கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பட்டையில் காணப்படும் முக்கியமான காம்பவுண்டுகள் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எனவே அடிக்கடி உங்களுடைய உணவில் இலவங்கப்பட்டையை சேர்ப்பதன் மூலமாகவும் இலவங்கப்பட்டை ஹேர் பேக் பயன்படுத்துவதன் மூலமாகவும் தலைமுடி உதிர்வை சமாளித்து தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 293

    0

    0