உங்க வீட்லயே இயற்கை கண்டிஷனர் இருக்கும்போது காசு கொடுத்து ஏன் கடையில வாங்கணும்…!!!
Author: Hemalatha Ramkumar17 October 2024, 11:24 am
நம்முடைய சமையலறையில் நிச்சயமாக பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் இருக்கும். இந்த பதிவில் நாம் கிராம்பு பற்றி தான் பேசப்போகிறோம். கிராம்பு நம்முடைய உணவுக்கு வாசனை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் ஏராளமான மருத்துவ பலன்கள் இருக்கிறது என்பது பரவலாக அறியப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்லாமல் கிராம்பில் நம்முடைய தலைமுடி வளர்ச்சி மற்றும் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நல்ல தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உதவுகிறது. கிராம்பில் இரும்பு சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் A, C மற்றும் K ஆகியவை உள்ளது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் உள்ள பீட்டா கரோட்டின் மயிர் கால்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்துக்கு எதிராக பாதுகாத்து தலைமுடி வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி கொடுக்கிறது. கிராம்பு தண்ணீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: கொரிய பெண்களின் அழகு இரகசியம்: முட்டை பேஸ் மாஸ்க்!!!
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
தலைமுடியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை தக்க வைத்து கிராம்பு தண்ணீர் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தலைமுடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து அதனை வலிமையாக்குகிறது.
பொடுகுக்கு சிகிச்சை அளிக்கிறது
ஆன்டிசெப்டிக், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த கிராம்பு தண்ணீர் பொடுகை விரட்டுவதற்கு சிறப்பாக செயல்படுகிறது. மயிர்க்கால்களை அமைதிப்படுத்தி அரிப்பு பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது
கிராம்பு தண்ணீரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால் இது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான மயிர் கால்களை பராமரிக்க உதவுகிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாப்பதன் மூலமாக ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் முடி இழப்பு மற்றும் முடி உடைந்து போவது தடுக்கப்படுகிறது.
இளநரையை தடுக்கிறது உங்களுடைய தலைமுடியின் இயற்கையான நிறத்திற்கு காரணமான பிக்மென்ட்களின் உற்பத்தியை அதிகரித்து இளநரை பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. கிராம்பு எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை வரவிடாமல் தடுத்து இளநரை பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
பளபளப்பான தலைமுடி
ஒருவேளை உங்களுடைய தலைமுடி அடிக்கடி உடைந்து பொலிவிழந்து காணப்பட்டால் அதற்கு நீங்கள் கிராம்பை பயன்படுத்துவதன் மூலமாக பலன் அடையலாம். இது உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து ஆழமான கண்டிஷனராக செயல்படுகிறது. இதனால் உங்களுக்கு மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.