நம்முடைய உடலுக்கு வொர்க்அவுட் செய்வது போலவே முகத்தில் உள்ள தசைகளுக்கு பேஷியல் யோகா என்பது சிறந்த வொர்க் அவுட் ஆக அமைகிறது. இது முகத்தில் உள்ள தசைகளுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. மசாஜ் செய்வது மற்றும் அக்குபஞ்சர் நுட்பங்கள் போன்றவை அடங்கிய இந்த பேஷியல் யோகா முகத்தில் உள்ள தசைகளை தூண்டி, ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பேஷியல் யோகா அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. ஒரு வேலை உங்களுக்கும் பேஷியல் யோகா செய்வதில் ஆர்வம் இருந்தால் அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை குறைக்கிறது
முகத்தில் உள்ள தசைகளுக்கு வலு சேர்த்து சரும தொனியை மேம்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் பேஷியல் யோகா மூலமாக மறைகிறது.
அதிக ரத்த ஓட்டம்
முக தசைகளுக்கு கொடுக்கப்படும் இந்த பயிற்சியானது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதனால் சரும செல்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதனால் உங்களுக்கு ஆரோக்கியமான பளபளப்பு கிடைக்கும்.
நச்சுகளை அகற்றுகிறது
பேஷியல் யோகா குறிப்பாக சருமத்தில் உள்ள அதிகப்படியான திரவங்கள் மற்றும் நச்சுக்களை அகற்றி முகம் குண்டாக தெரியாமல் பார்த்துக் கொள்கிறது.
இதையும் வாசிக்கலாமே: இந்த மாதிரி பீரியட்ஸ் இருந்தா பிரக்னன்ட் ஆவதற்கான சான்ஸ் ரொம்ப கம்மி!!!
மன அழுத்தத்தை குறைக்கிறது
மன அழுத்தம் உங்களுடைய சரும ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். பேஷியல் யோகா செய்யும் பொழுது உங்கள் கவனம் முழுவதும் பயிற்சியில் இருப்பதாலும், ரிலாக்சேஷன் கிடைப்பதாலும் உங்களுக்கு இருந்த டென்ஷன் அனைத்தும் மறைந்து, மிகவும் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது
உங்களைப் பற்றி நீங்கள் நல்ல முறையில் நினைக்கும் பொழுது அது உங்களுடைய முகத்தில் வெட்ட வெளிச்சமாக வெளிப்படும். வழக்கமான முறையில் பேஷியல் யோகா செய்வது உங்களுக்கு இளமையான தோற்றத்தை அளிக்கும். இதன் மூலமாக உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பேஷியல் யோகா உங்களுக்கானதா?
பேஷியல் யோகா என்பது பாதுகாப்பான மற்றும் சரும பராமரிப்புக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கையான ஒரு அணுகுமுறை. இது பெரும்பாலான நபர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. எனினும் குறிப்பிட்ட சில சரும பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு யோகா மூலமாக தீர்வு கிடைக்காமல் போகலாம். எனவே உங்களுடைய அன்றாட வழக்கத்தில் எந்த ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் முன்பும் நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது. ஒரு நாளைக்கு வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்வதன் மூலமாக இதனை நீங்கள் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.