எந்த பருவமாக இருந்தாலும் சரி, சருமத்தை பாதுகாப்பது என்பது ஒரு கடினமான காரியமாகத் தோன்றும். கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் சருமத்தை வறண்டு போக செய்கிறது.
சருமத்தைப் பொறுத்தவரை, அதன் நீரேற்றத்தை பராமரிப்பது மிக முக்கியம்.
இதனை செய்ய உடல் எண்ணெய் உங்களுக்கு உதவும். உடல் எண்ணெய், என்பது சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் பாதுகாப்பு மாய்ஸ்சரைசர் ஆகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சருமத்தின் நீரேற்றத்தைப் பூட்டுவதற்கான சரியான வழியை வழங்குவதால், சருமத்தின் தாகத்தைத் தணிக்க சிறந்த தயாரிப்பு என நிபுணர்கள் உடல் எண்ணெய்களை பரிந்துரைத்துள்ளனர். உடல் எண்ணெய் பயன்படுத்துவதன் சில நன்மைகள்:-
சருமம் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது:
உடல் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை பல மணி நேரங்களுக்கு பூட்டுகிறது. இது மட்டுமல்ல, இது சருமத்தின் பாதுகாப்புத் தடையை ஊடுருவி, நாள் முழுவதும் பளபளப்பை பராமரிக்க உதவுகிறது.
தழும்புகளை நீக்குகிறது:
பாடி ஆயில் சருமத்தில் தடவப்பட்டவுடன் அது சருமத்தின் அடியில் ஆழமாக உறிஞ்சப்பட்டு உள்ளே இருந்து ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது சருமத்தை உள்ளே இருந்து சரிசெய்வதால், உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மற்றும் பழைய தழும்புகளை நீக்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது:
உடல் எண்ணெய்கள் அனைத்து இயற்கை பொருட்களாலும் தயாரிக்கப்படுகின்றன மற்றும் நறுமணப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அளவை அதிகரிக்கிறது. உடல் எண்ணெய்கள் மன அழுத்தத்தை நீக்குகிறது, மனதை தளர்த்துகிறது, பதட்டத்தை குறைக்கிறது, தொடுதலை வளர்ப்பதற்கான தேவையை பூர்த்தி செய்கிறது மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வறண்ட சருமத்திற்கான தீர்வு:
உடல் எண்ணெய் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கொடூரமானதாக இருக்கும். இவர்கள் உடல் எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.