தேங்காய் எண்ணெய் Vs பெட்ரோலியம் ஜெல்லி… எது பெஸ்ட்டுனு தெரிஞ்சுப்போமா???
Author: Hemalatha Ramkumar22 February 2023, 6:40 pm
வறட்சியான சருமம் அல்லது வறட்சியான கூந்தல் உள்ள பெண்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது தேங்காய் எண்ணெயே ஆகும். சருமத்தை ஈரப்பதமாக்க உதவும் பெட்ரோலியம் ஜெல்லி இதற்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது. வறண்ட உதடு மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.
எனவே தேங்காய் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி இவற்றில் எதை தேர்வு செய்வது என்பது கடினம். கவலை வேண்டாம், ஒரு தோல் மருத்துவர் உங்கள் சருமத்திற்கு, குறிப்பாக உங்கள் முகத்திற்கு எது சிறந்தது.
தேங்காய் எண்ணெய் vs பெட்ரோலியம் ஜெல்லி
பெட்ரோலியம் ஜெல்லியை நாம் தொடும்போது அது வழவழப்பாக இருக்கும். அது எண்ணெய் சுத்திகரிக்கும்போது பெறப்படும் ஒரு துணை தயாரிப்பாகும் மேலும் அது சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்காது. தேங்காய் எண்ணெய், உலர்ந்த தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான எண்ணெயாகும். நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்களா என்பது எண்ணெய் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. நமது உடலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது இயற்கையாகவே நமது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. எனவே, முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மிக நன்று.
தேங்காய் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியின் நன்மைகள்:
பெட்ரோலியம் ஜெல்லி உடலில் நீர்வறட்சியால் ஏற்படும் இவைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது:
• வெடிப்பான உதடுகள்
• செதில் போன்ற தோல்
• சொறி
பெட்ரோலியம் ஜெல்லி முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற பகுதிகளை ஈரப்பதமாக்க உதவுகிறது. ஆனால் மினரல் ஆயில் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி போன்றவை உண்மையில் மாய்ஸ்சரைசர்கள் அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை ஈரப்பதம் தோலில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு தடையாக மட்டுமே செயல்படுகின்றன.
தேங்காய் எண்ணெய் என்பது லினோலிக் அமிலம் மற்றும் லாரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நறுமணமற்ற தாவர எண்ணெய் ஆகும். இது பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை மென்மையாக்க மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது (தோலுக்கு தேங்காய் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது).
தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
பெட்ரோலியம் ஜெல்லியை நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய உடல்நலப் பிரச்சனைகள்
பெட்ரோலியம் ஜெல்லியில் பல நன்மைகள் இருந்தாலும், அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் முகத்தில் தோல் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும் (தோல் சுருக்கங்களைத் தவிர்க்க வயது முதிர்வை எதிர்க்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும்).
நீங்கள் முகப்பருவில் இருந்து விடுபட விரும்பினால், உங்கள் முகத்தில் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இது முகத்தில் உள்ள துளைகளை அடைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. சில பிராண்டுகள் துளைகளை அடைப்பதில்லை என்றாலும், அடிக்கடி பயன்படுத்தும் போது இது ஒரு தடையை உருவாக்குகிறது, இது தோல் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, முகப்பரு பிரச்சனை உள்ள பெண்கள் மற்றும் சென்சிட்டிவான சருமம் உள்ளவர்கள் முகப்பரு பாதிப்பு உள்ள பகுதிகளில் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக முகத்திற்கு இயற்கையான மாற்று:
மினரல் ஆயில், பாரஃபின் மெழுகு, பெட்ரோலேட்டம், நாப்தா மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற பெட்ரோலிய துணை தயாரிப்புகளைத் தவிர்க்கவும். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருள்களைப் பயன்படுத்தும் தயாரிப்புகளை பயன்படுத்தவும். கோகோ, ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே ஈரப்பதம் உள்ள சருமத்தை பெறலாம்.
எனவே, பெட்ரோலியம் ஜெல்லியை காலை எழும்போதும் அல்லது தூங்குவதற்கு முன்னும் அதை உங்கள் முகத்தில் தடவுகிறீர்கள் என்றால் அதை விட்டுவிட வேண்டும். உங்கள் முகம் ஈரப்பதமாக இருக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முயற்சி செய்யவும்!
0
0