என்ன தான் சிறப்பான தோல் பராமரிப்பு வழக்கத்தைக் கொண்டிருந்தாலும் நம்மில் பலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது பலருக்கு பெரும் கவலையாக உள்ளது. கருவளையத்தைப் போக்க விலையுயர்ந்த தயாரிப்புகளை முயற்சிக்கிறோம். ஆனால் ஒரு சிம்பிளான வீட்டு வைத்தியம் மூலமாகவே கருவளையங்களைக் குறைக்க முடியும். இந்த வைத்தியம் கருவளையங்களை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், இழந்த பளபளப்பை மீண்டும் கொண்டுவருகிறது.
கருவளையங்களைப் போக்க, 1 வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும். அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து உங்கள் கருவளையங்களுக்கு தடவி, கண்களுக்கு அடியில் மெதுவாக மசாஜ் செய்து, பேஸ்ட்டை உலர விடவும். பின்னர் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
இந்த பேஸ்ட்டை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:-
●சரும மாய்ஸ்சரைசர்: வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஜெல் கலவையானது சருமத்தின் வறட்சியை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. பேஸ்ட் கண்களைச் சுற்றியுள்ள தோலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.
●வீக்கத்தைப் போக்கும்: கற்றாழை ஜெல்லில் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளதால், கண் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, இந்த பேஸ்ட்டை தொடர்ந்து தடவுவது கண்களின் கருவளையங்களுடன் சேர்ந்து வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
●சுருக்கங்களைப் போக்க: வாழைப்பழம் சிலிக்காவின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனவே, வாழைப்பழங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் முகம் இயற்கையாக பளபளக்க ஆரம்பிக்கிறது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.