உங்க வீட்டு கிட்சன்லயே பியூட்டி பார்லர் இருக்கு… எப்படின்னு கேட்குறீங்களா…???

Author: Hemalatha Ramkumar
8 October 2022, 10:09 am

பளபளப்பான சருமத்தைப் பெற வீட்டில் கிடைக்கக்கூடிய இந்த எளிதான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க் ரெசிபிகள்
குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ​பியூட்டி பார்லருக்கு சென்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக குறைந்த செலவில் இந்த ஈசியான ஃபேஸ் பேக்குகளைப் போட்டு நிரந்தரமான முடிவுகளைப் பெறலாம்.

பப்பாளி
சருமத்தை மென்மையாக்கும் விளைவுகளை அடைய பப்பாளி ஃபேஷியல் சிறந்தது. பப்பாளி துண்டுகளை மசித்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். முகம் முழுவதும் தடவி, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும்.

வாழைப்பழம்
வைட்டமின் A கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை மறையச் செய்யவும், கரடுமுரடான சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. வைட்டமின் B வறட்சியைத் தடுக்க உதவுகிறது. வைட்டமின் E சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் நீரேற்றம் மற்றும் ஈரப்பதமாக்க உதவுகிறது. இந்த அனைத்து சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளது. எனவே வாழைப்பழம் இயற்கையான ஃபேஷியலுக்கு ஏற்றது.

ஓட்ஸ் மாஸ்க்
ஓட்ஸ் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சியை போக்க உதவும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனுடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்த பிறகு, 10 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் முகத்தைக் கழுவலாம்.

வினிகர் ஃபேஸ் மாஸ்க்
முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவவும். உங்கள் சருமத்தை இறுக்கமாக்க, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 2 கப் தண்ணீருடன் கலக்கவும். கூடுதலாக, 1/4 கப் சைடர் வினிகர் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்தால் ஃபேஷியல் தயார். இந்த கரைசலை உங்கள் முகத்தில் மெதுவாகப் பயன்படுத்துங்கள். பின்னர் உலர விட்டு கழுவிக் கொள்ளலாம்.

பால் மற்றும் காபி மாஸ்க்
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பாலுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி காபி பொடியை சேர்த்து கலக்கவும். இரண்டையும் கலந்த பிறகு, பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் 15 நிமிடங்கள் வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பளிச்சென்று மாற்றும்.

  • Ajith kumar Good Bad Ugly Remake of Korean Hit Movie கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?