பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் முடி ஒரு பெரிய முக்கியத்துவத்தை வகிக்கிறது. பல்வேறு காரணங்களால்,
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முடி பாதிக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பும் அழகான, ரம்மியமான முடியை பெற உதவும் மூலிகைகள் மற்றும் எண்ணெய்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
●கிரீன் டீ:
பல ஆரோக்கிய நன்மைகளுடன், கிரீன் டீ தலைமுடியை வளர்க்கவும் உதவும்கிறது. கிரீன் டீயில் இருந்து எடுக்கப்பட்ட சாறு 6 மாதங்களில் முடி வளர்ச்சியை கணிசமாக அதிகரிப்பதாக எலிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் உங்கள் தலைமுடியை வளர்க்க நினைத்தால், தொடர்ந்து கிரீன் டீ அருந்தவும்.
●கற்றாழை:
கற்றாழை சருமத்திற்கான பல நன்மைகள் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு பிரபலமானது. இது மென்மையானது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை தடுக்கும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உடலிலுள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துகிறது.
கற்றாழை ஹேர் மாய்ஸ்சரைசரை எளிமையாக தயார் செய்யலாம். ஒரு பாட்டிலில், ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் கற்றாழை சாறு சேர்க்கவும். இதை நன்றாக கலக்க வேண்டும். இப்போது கற்றாழை ஹேர் மாய்ஸ்சுரைசர் தயார்.
●ரோஸ்மரி எண்ணெய்:
ரோஸ்மரி எண்ணெய், சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தவிர, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு நல்ல பொருள் ஆகும். ரோஸ்மரி எண்ணெய், முடி உதிர்தலுக்கான நிலையான தீர்வை 6 மாதங்களில் தருகிறது. 10 முதல் 12 சொட்டு வரை இந்த எண்ணெய்யை நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு உடன் கலந்து பயன்படுத்தி வாருங்கள்.
●வெங்காய சாறு:
வெங்காய சாறு உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றுகிறதா? இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் முடி உதிர்வைத் தடுக்க இது பயனுள்ளதாக இருக்கும். வெங்காய சாற்றைப் பயன்படுத்தி, ஒரு ஆய்வில், முடி மீண்டும் வளரும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
வெங்காய சாறு தயாரிக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதை மிக்ஸியில் நன்றாக அரைத்து சாற்றை மட்டும் பிழிந்து எடுக்கவும்.இந்த
வெங்காய சாற்றை உங்கள் உச்சந்தலையில் தினமும் இரண்டு முறை தடவவும். சுமார் 6 வாரங்களுக்கு இதை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
●தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் பலவகை நற்குணங்கள் கொண்ட ஒரு எண்ணெயாகும். இதை தலை குளிப்பதற்கு முன்பு அல்லது பின்பு தலைமுடியில் உபயோகிக்கலாம். இதனால் நமது தலைமுடி உதிர்வு கணிசமாக குறையும். மினரல் ஆயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெயுடன் ஒப்பிடும் போது, தேங்காய் எண்ணெய் மட்டுமே முடி சேதத்தை குறைக்கும். நீங்கள் ஆரோக்கியமான, நீண்ட கூந்தலைத் பெற விரும்புகிறீர்கள் என்றால், தேங்காய் எண்ணெய் முற்றிலும் அவசியம்!
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.