உங்க வீட்ல கற்றாழை இருந்தா போதும்… பார்லருக்கு எல்லாம் இனி போக வேண்டாம்!!!
Author: Hemalatha Ramkumar14 May 2022, 6:11 pm
கற்றாழை முகப்பருவால் ஏற்படும் எரிச்சலை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதால் முகப்பருவால் ஏற்படும் சிவப்பு தன்மை, வீக்கம், எரிச்சல் ஆகியவற்றை குறைத்து முகத்திற்கு குளிர்ச்சி தருகிறது.
கற்றாழையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் பழைய தோல் நீங்கி புதிய பளபளப்பான தோல் கிடைக்கும். இதை நாம் வீட்டில் நேரம் கிடைக்கும் பொது பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தி வர தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். இதை முகத்தில் மட்டுமல்லாமல் கை, கால் உட்பட உடலின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பெண்களும் தங்கள் முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு கற்றாழை ஒன்றே போதும்.
கற்றாழைக்குள் இருக்கும் வழவழப்பான ஜெல் அல்லது சாறு உங்கள் சரும நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடிய அநேக நற்குணங்களை கொண்டிருப்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இது பற்றி இன்னும் நுணுக்கமாக பார்க்கலாம். எண்ணெய் பசை சருமம், உலர் சருமம், எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்ட சருமம் என எல்லா வகை சருமங்களிலும் இது மாயத்தை நிகழ்த்தி அப்பழுக்கில்லாத சருமம் பெற உதவுகிறது. உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கூட இந்த செடி இருந்து இவற்றை கொண்டு சரும நலனை எப்படி பாதுகாப்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம், உங்கள் முகத்தை கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி எப்படி பொலிவுடன் வைத்து கொள்வது என்று பார்ப்போம்.
* கற்றாழை ஜெல்லை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்து பின்பு அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று பொலிவுடன் இருக்கும்.
*முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர் 2 சொட்டு மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
* வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அதனைப் போக்க, கற்றாழை ஜெல்லுடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, நிறம் அதிகரிக்கம்.
* முதலில் ஒரு கிண்ணத்தில் கடலைமாவு ஒரு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் இரண்டு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு ஐந்து நிமிடம் கழித்து அந்த கலவையை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
*கற்றாழை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றை கலந்து முகத்தில் தடவிய பின் உலர விட்டு கழுவி வந்தால், சென்சிட்டிவ் சருமத்தினருக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் தீரும்.
*முதலில் ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை மேஷ் செய்து , இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்தில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்கும். சருமத்தில் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
*முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை தேவையான அளவு, பத்து வேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து . அதை முகத்தில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமை, கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று பொலிவுடன் காணப்படும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய கற்றாழையை பயன்படுத்தி உங்கள் முகத்தை பொலிவுடனும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
1
0