சம்மர் வெயில்ல இருந்து உங்க சருமத்த உஷாரா வச்சுக்க சில டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar20 February 2023, 3:18 pm
குளிர்காலம் மட்டுமல்ல, கோடைக்காலத்திலும் சருமத்திற்கு பல விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். வெப்பம் மற்றும் ஈரமான வானிலை நீரிழப்பு, அரிப்பு, வறண்ட மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல், வெப்பமானது வியர்வை மற்றும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக முகப்பரு உண்டாகிறது. இந்த சரும பிரச்சனைகளை சமாளிக்க, இந்த சீசனில் உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆயுர்வேதம் சொல்லும் கோடைக்கான சிறந்த மூன்று சரும பராமரிப்பு குறிப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
போதுமான தண்ணீர் குடியுங்கள்:
உங்களையும் உங்கள் சருமத்தையும் நீரேற்றமாக வைத்திருக்க, போதுமான அளவு திரவங்களை குடிக்க வேண்டும்.
ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை சாறு:
ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை சாறு உங்கள் சருமத்திற்கு நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது.
படுக்கை நேரத்தில் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள்:
உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும் குறைபாடற்றதாகவும் இருக்க உதவும் பல்வேறு வகையான சருமத்திற்கான சில DIY ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாக்கலாம்.
கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்க காரமான, அதிக புளிப்பு, புளித்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியமான சருமத்திற்கு நல்ல தூக்கம் சமமாக முக்கியமானது.