முடி நல்லா வளரணும்னா இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
29 June 2023, 6:51 pm

முடி மெலிஞ்சுகிட்டே போகுதா? கவலையே படாதீங்க.. உணவு மூலமாகவே தலைமுடி வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கலாம். நமது உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பட்சத்தில் உணவு மூலமாகவே அந்த பிரச்சனையை சரி செய்து விடலாம். அந்த வகையில் முடி உதிர்தலை குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கூடிய ஒரு சில உணவுகளை சாப்பிடுவது உதவக்கூடும்.

முடி வளர்ச்சியை பொருத்தவரை பி வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். பல்வேறு வகையான வைட்டமின்கள் இருந்தாலும் குறிப்பாக வைட்டமின் பி சத்து முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான முடிக்கு பங்களிக்கிறது. பி7 (பயோடின்), ஃபோலேட், மற்றும் பி12 போன்ற பி வைட்டமின்கள் தலைமுடி செல்கள் உருவாகவும் அவற்றின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஃபோலேட் மற்றும் பி12 ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு அவசியம். பொதுவாக ரத்த சிவப்பு அணுக்கள் முடியின் மயிர் கால்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்கின்றன. இதனால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது. ஆகவே பி வைட்டமின்கள் நிறைந்த ஒரு சில உணவுப் பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து காரணமாக அவை ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவற்றில் இருக்கக்கூடிய பயோடின் நமது தலைமுடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

முட்டை பயோடின் உட்பட பல்வேறு விதமான பி வைட்டமின்களின் ஆதாரமாக உள்ளது. இது முடி வளர்ச்சி மற்றும் அதன் வலிமையை அதிகரிக்கிறது.
தலைமுடியை வலுவாக்குகிறது.

கீரை, முட்டைகோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது தலைமுடியை வலுவாக்க உதவும். ஏனெனில் அவற்றில் வைட்டமின் பி சத்து அதிக அளவில் உள்ளது.

வஞ்சரம் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்களை சாப்பிடுவது தலைமுடி வளர்ச்சிக்கும், மயிர் கால்களுக்கும் நல்லது. இவற்றில் பி 12 வைட்டமின் காணப்படுகிறது.

பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகளில் பி வைட்டமின்கள் இருப்பதால் அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

எல்லா வகையான நட்ஸ் மற்றும் விதைகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அதிலும் குறிப்பாக பாதாம் அல்லது சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

பிரவுன் ரைஸ் மற்றும் ஓட்ஸ் போன்ற சிறுதானியங்களில் இருக்கக்கூடிய பி வைட்டமின்கள் காரணமாக அவை தலைமுடியை வலுவாக்குகின்றன.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. இவை பி வைட்டமின்கள் உறிஞ்சுதலை அதிகப்படுத்தி முடி வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!