சம்மர் ஆரம்பித்ததில் இருந்து முடி ரொம்ப கொட்டுதா… கவலையே படாதீங்க… உங்களுக்கான தீர்வு இங்க இருக்கு!!!
Author: Hemalatha Ramkumar8 April 2022, 3:21 pm
வெப்பநிலை உயரத் தொடங்கியதால் நம்மில் பலருக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்படலாம். இதற்கு மன அழுத்தம் போன்ற வேறு எந்த வெளிப்படையான காரணமும் இருக்காது என்று நீங்கள் நினைத்தால், வானிலையானது வியர்வை நிறைந்த நாட்களுக்கு மாறுவது ஒரு காரணமாக இருக்கலாம். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி படி, கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் முடி உதிர்தல் அதிக ஆபத்துடன் தொடர்புடையது. உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு காரணமான காரணிகள் பல உள்ளன. அவற்றுள் உங்கள் உணவுமுறையே முதன்மையானது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதன் அடிப்படையிலே நம் தோற்றம் அமையும். உங்கள் சருமம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, உங்கள் தலைமுடியும் நீங்கள் உண்ணும் உணவுகளிலிருந்து அதன் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுகின்றன. எனவே, கோடையில் முடி உதிர்வு நிலையை மாற்றியமைக்க விரும்பினால், மேனிக்கு வரப்பிரசாதமாக இருக்கும் உணவுகளைச் சேர்த்து உங்கள் உணவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். முடி ஆரோக்கியத்திற்காக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 கோடைகால உணவுகளின் பட்டியல்:
●மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவது அழகான முடியைப் பெற உதவும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ‘பழங்களின் ராஜா’ வான மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் தலைமுடியை இயற்கையாகவே ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை ஆரோக்கியமான வளர்ச்சியை எளிதாக்குகின்றன. உண்மையில், மாம்பழத்தில் காணப்படும் பெக்டின் ஆரோக்கியமான உச்சந்தலைக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
●தயிர்
தயிர் நமக்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் இது நம் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். தயிரில் புரதம் நிறைந்துள்ளது. இது மயிர்க்கால்களுக்கு கட்டுமானப் பொருளாகும். தயிரில் வைட்டமின் பி5 உள்ளது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதாக அறியப்படுகிறது.
●பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி முடி சேதத்தைத் தடுக்கின்றன.
●தர்பூசணி
இது கோடையில் மிகவும் பிடித்தமான மற்றொரு பழமாகும். இது நம்மை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிக நீர் மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக எடையைக் குறைக்க உதவுகிறது. நீரிழப்பானது இறுதியில் முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும். தர்பூசணி உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் போதுமான நீரேற்றத்தை வழங்குகிறது.
●மீன்
முடி ஆரோக்கியத்திற்கு மீன் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் சிகப்பு மற்றும் உச்சந்தலை செல்களுக்கு உணவளிக்கின்றன, முடி நீளமாகவும் வலுவாகவும் வளர உதவுகிறது.