கோடைக்காலம் வந்தாச்சு, வெயிலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும். அந்த வகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை காலத்தில் நாம் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
கோடைக்காலத்தில், மாம்பழங்களை நாம் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது. அதனை அதிகப்படியான சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் சரும எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் துளைகளை அடைத்து முகப்பருவிற்கு வழிவகுக்கும். எனவே, மாம்பழம் போன்ற அதிக சர்க்கரை கொண்ட பழங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது முகப்பரு ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக உயர்த்தி முகப்பருவை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
பால், குறிப்பாக கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் வே புரதத்தைக் கொண்ட பால் முகப்பரு பிரச்சினைகளை மோசமாக்கும். இதேபோல், சாக்லேட்களை அதிகமாக உட்கொள்வதால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அதிக முகப்பரு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. முகப்பருக்கள் வராமல் தடுக்க சாக்லேட் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவு, குறிப்பாக வெள்ளை ரொட்டி, பாஸ்தா இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு பங்களிக்கும் மற்றும் சரும எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, முகப்பருவிற்கு வழிவகுக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
This website uses cookies.