தலைமுடி உதிர்வுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்து முடி வளர்ச்சிக்கு கேரண்டி கொடுக்க இவ்வளவு எண்ணெய்கள் இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படறீங்க!!!

Author: Hemalatha Ramkumar
4 September 2024, 6:02 pm

தலை முடி பிரச்சனை இல்லாதவர்களை பார்ப்பதே தற்போது அரிதாகி விட்டது. அந்த அளவுக்கு தலை முடி உதிர்தல், பொடுகு, பிளவு முனைகள், இளநரை போன்ற பல்வேறு தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு என்பது கட்டாயமாக இருக்கும். அந்த வகையில் தலைமுடி பிரச்சனைகளை சமாளித்து நீண்ட முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் எண்ணெய் வகைகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தலைமுடி வளர்ச்சிக்கு பிரபலமான ஒரு சாய்ஸாக அமையும் இந்த எண்ணெய் மயிர்க்கால்களில் ஊடுருவி, அதில் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் தலைமுடிக்கு தேவையான போஷாக்கை வழங்கவும் உதவுகிறது.

ஆர்கான் எண்ணெய்

வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள ஆர்கான் எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து அதனை வலிமையாக மாற்றுகிறது.

ஜோஜோபா எண்ணெய் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் எக்கச்சக்கமாக காணப்படும் இந்த எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து தலைமுடி உதிர்வதையும் தவிர்க்கிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக அமையும் ஆலிவ் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தலைமுடி சேதம் அடைவதில் இருந்து அதனை பாதுகாக்கிறது.

விளக்கெண்ணெய்
தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் வலிமையை அளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு நீங்கள் தாராளமாக விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்.

பாதாம் எண்ணெய்

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு தேவையான போஷாக்கை வழங்கி அதன் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

திராட்சை விதை எண்ணெய் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த திராட்சை விதை எண்ணெய் மயிர் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலமாக ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

ரோஸ்மேரி எண்ணெய் மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கு ரோஸ்மேரி எண்ணெய் உதவுகிறது. மேலும் தலைமுடி ஆரோக்கியமாக வளரவும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த எண்ணை பெயர் போனது.

தேயிலை மர எண்ணெய் எரிச்சலடைந்த மயிர்கால்களை ஆற்றுவதற்கு தேயிலை மர எண்ணெய் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும், இந்த எண்ணெய் உறுதுணையாக இருக்கிறது.

லாவண்டர் எண்ணெய் மயிர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடிக்கு அமைதியான விளைவை அளிக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை கொடுக்கவும் லாவண்டர் எண்ணெய் வேலை செய்கிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 276

    0

    0