இந்த பதிவில் கழுத்தில் கருமை ஏற்படுவதற்கான காரணங்களும், கழுத்தில் ஏற்பட்டுள்ள கருமையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். சிலருக்கு முகம் வெண்மையாக இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும் இந்த மாதிரியான பிரச்சனைகளை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரி செய்து விடலாம்.
கழுத்தில் கருமை ஏற்படுவதற்கான காரணங்கள்:
உடல் பருமன், அதிகப்படியான இன்சுலின், மரபியல் காரணங்கள், சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய உடல் எடை அதிகரிக்கப்பாலும், வாசனை திரவியங்கள் உடலில் படுவதாலும், ஹேர் டை சார்ந்த பல திரவியங்களின் ஒவ்வாமை, சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், அலர்ஜி, ஆகியவற்றால் தோல் கருமையாகும். தோலை பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே அவற்றை சரி செய்யலாம்.
கழுத்தில் உள்ள கருமை மறைய செய்ய வேண்டியவை:
கற்றாழை:
கற்றாழை உள்ளே இருக்கக்கூடிய ஜெல்லை எடுத்து கழுத்தில் போட்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே தூங்க வேண்டும். பிறகு மறு நாள் காலையில் அதை கழுவி விட வேண்டும்.
இது போல் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்தில் உங்கள் கழுத்தில் இருக்கக்கூடிய கருமை நிறமானது படிப்படியாக குறையத் தொடங்கும்.
பச்சைப் பயிறு:
*பச்சைப் பயிருக்கு இயற்கையாகவே முகத்தை பளிச்சென்று செய்து விடும்.எனவே இந்த பச்சைப் பயிறு மாவு 1 டேபிள்ஸ்பூன், பால் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கழுத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருமை நிறம் விரைவில் குறைந்தது விடும்.
தக்காளி:
*தக்காளி சாறு மற்றும் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெகு விரைவில் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து விடும்.
சர்க்கரை:
*சர்க்கரை, எலுமிச்சை, தேன் மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கழுத்து பகுதியில் தினந்தோறும் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து 1/2மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்தில் இருமுறை செய்து வந்தால் கருமை நீங்கி விடும்.
அரிசி மாவு:
*இயற்கையாகவே அரிசிமாவிற்கு கண்ணுக்கு தெரியாத அழுக்கு மற்றும் கிருமிகள் அழிக்கக்கூடிய தன்மை உள்ளது. எனவே ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவுடன் சுத்தமான பசு பால் சேர்த்து ஒன்றாக கலந்து, அதை கழுத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும்.
தயிர்:
* தயிர் 1 டேபிள்ஸ்பூன், கடலைமாவு 1/2டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை மூன்றையும் நன்கு கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முல்தானி மெட்டி:
*முல்தானி மெட்டி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருமை நிறம் நீங்கி விடும்.
உருளைக்கிழங்கு:
*சாறு நிறைந்த உருளைக்கிழங்கை எடுத்து அப்படியே இரண்டாக வெட்டி கழுத்துப்பகுதியில் மிருதுவாக தேய்க்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். உருளைக்கிழங்கு கழுத்து கருமையை போக்க உதவும்.
* ஆரஞ்சு பழத்தோலை எடுத்து காய வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 1 டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கி, அந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி உலர விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒருமுறை செய்தாலே போதும் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
* ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி சாறு கலந்து பேஸ்ட் செய்து அதை கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் காய விடவேண்டும். அதன்பிறகு, நன்கு தேய்த்துக் கழுவவும். இது நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படும். இறந்த செல்களைப் புதுப்பிக்கும். இதனால் கழுத்திலுள்ள கருமை மறைந்து போகும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.