Categories: அழகு

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முடி உதிர்வுக்கான நிரந்தர தீர்வு!!!

முடி உதிர்வு‌ என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
மன அழுத்தம், தூக்கமின்மை, விட்டமின் குறைபாடு, தண்ணீர் மாற்றம் எனப்பல வகையான காரணங்களால் முடி உதிர்வது ஏற்படுகிறது. தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

தலைமுடி உதிர்வதைத் ‌தடுக்க கறிவேப்பிலை:
*கறிவேப்பிலை, மருதாணி இலை இரண்டையும் ‌சேர்த்து அரைத்து தலையில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் உடல் சூடு தணிந்து முடி கருமையாக வளரும்.

*முடி உதிர்வதைத் ‌தடுக்க எண்ணெய் மசாஜ்:
இளஞ்சூடான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முடி உதிர்வது குறையும். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம்‌ அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ‌கிடைக்கின்றன.

*முடி உதிர்வதைத் ‌தடுக்க கற்றாழை:
இயற்கையாக கிடைக்கக்கூடிய கற்றாழையை எடுத்து அதில் நடுவில் உள்ள சதை பகுதியை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து முடி பளபளப்பாக இருக்கும்.

*முடி உதிர்வதை தடுக்க தயிர்:
வாரம் ஒரு முறை குளிப்பதற்கு முன் தயிரை அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளித்தால். கேசத்துக்கு ஊட்டச்சத்து கிடைத்தது முடி உதிர்வது குறையும்.

*முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் குளியல்:
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து இளஞ்சூடாக ‌தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின்பு ஒரு மணிநேரம் கழித்து குளித்தால். நாளடைவில் தலைமுடி ‌உதிர்வது குறையும்.

*முடி உதிர்வதை தடுக்க சின்ன வெங்காயம்:
சிலருக்கு பொடுகு தொந்தரவு இருக்கும். அதற்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி முடி உதிர்வது குறையும்.

*முடி உதிர்வதை தடுக்கும் கொத்தமல்லி இலை:
அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள் கொத்தமல்லி தழை. கொத்தமல்லி இலையில் உள்ள சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி குளித்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வது குறையும்.

*முடி உதிர்வதை தடுக்கும் வெந்தயம்:
தேவைக்கேற்ப வெந்தயத்த ‌எடுத்து தண்ணீரில் ‌ஊற வைத்து ‌அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று. முடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

*முடி உதிர்வதை தடுக்கும் சோம்பு:
வாரம் இரண்டு முறை சோம்பை எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வது குறையும்.

*முடி உதிர்வதை தடுக்கும் சாதம் வடித்த தண்ணீர்:
நாம் வீண் என நினைத்து கீழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீரில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. சாதம் வடிக்கும் போது கிடைக்கும் நீருடன், சீகைக்காய் கலந்து தலைக்குத் தடவி வாரம் இரு முறை குளிக்கலாம். இவ்வாறு செய்யும்போது, தலைமுடி அடர்த்தியாக காணப்படுவது மட்டும் அல்லாமல் பளபளப்பாகவும் வளரும்.

இப்படி வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உங்கள் முடியை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

2 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

3 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

3 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

3 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

4 hours ago

This website uses cookies.