முகத்தின் அழகை மீட்டெடுத்து ‘பிளாக்ஹெட்டை’ மறைந்து போக செய்யும் DIY பேஸ் பேக்குகள்!!!
Author: Hemalatha Ramkumar30 September 2022, 1:58 pm
பிளாக்ஹெட்கள் பொதுவாக பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான தோல் பிரச்சனை. இது பொதுவாக மூக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பாதிக்கிறது. அழுக்கு, கெரட்டின் மற்றும் எண்ணெய் ஆகியவை திறந்த துளைகள் மற்றும் மயிர்க்கால்களில் சிக்கியிருப்பதால் இது ஏற்படுகின்றனது. எளிமையாகச் சொன்னால், கரும்புள்ளிகள் ஒரு வகை முகப்பரு. இறந்த சரும செல்கள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களின் கலவையால் நமது துளைகள் அடைக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் தோலின் மேற்பரப்பில் தள்ளப்படும்போது பிளாக்ஹெட்கள் நிகழ்கிறது. அங்கு அவை காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்ஸிஜனேற்றப்பட்டு விரைவாக கருப்பு நிறமாக மாறும். எந்த வலியும் இல்லாமல் பிளாக்ஹெட்களை அகற்றி மென்மையான சருமத்தை மீண்டும் பெற உதவும் சில ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி நைட் பேக்: சில ஃபிரஷான கொத்தமல்லி இலைகளை எடுத்து நன்றாக கழுவவும். இதனோடு சிறிது மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இந்த முகமூடியை கரும்புள்ளிகள் மீது தடவி, முடிந்தால் இரவு முழுவதும் அல்லது அது காய்ந்து போகும் வரை முகத்தில் விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
முட்டை வெள்ளைக்கரு மாஸ்க்: 1 முட்டையின் வெள்ளைக்கருவை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து கரும்புள்ளிகள் மீது பயன்படுத்தவும். பின்னர் அதை உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் போதும். வாரம் ஒருமுறை இதை பயன்படுத்தவும்.
தயிர் ஓட்ஸ் மாஸ்க்: இந்த பிளாக்ஹெட் மாஸ்க்கிற்கு 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு தேவை. பொருட்கள் அத்தனையும் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவவும். அதை உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இதனை பயன்படுத்தலாம்.
மஞ்சள் மற்றும் சந்தனம் பேக்: ஒரு டீஸ்பூன் சந்தனப் பொடியுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் இதனைப் பயன்படுத்தவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து மெதுவாக தேய்க்கவும். வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கை 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். கரும்புள்ளிகளைத் தவிர்க்க எண்ணெய் சார்ந்த மேக்கப்பைத் தவிர்க்கவும், எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்.